குளியாப்பிட்டியில் இன்று (27) காலை பாடசாலை வேன் மற்றும் லொறி நேருக்கு நேர் மோதி மூவர் உயிரிழந்த சம்பவத்தில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த சிறுவர்கள் 12 மற்றும் 13 வயதுடையவர்கள் மற்றும் வேன் சாரதி 64 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.