லொறியுடன் மோதி தீப்பிடித்த பேருந்து ; 17 குழந்தைகள் உட்பட 71 பேர் பலி!

  

Agpwin News

லொறியுடன் மோதிய பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்து விபத்திற்குள்ளானதில் 17 குழந்தைகள் உட்பட 71 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.




இந்த விபத்து ஆப்கானிஸ்தானின் மேற்கு ஹெராத் மாகாணத்தில்  பதிவாகியுள்ளது.




ஈரானில் இருந்து நாடு கடத்தப்பட்ட ஆப்கானியர்களுடன்  எல்லையைக் கடந்து காபூலை நோக்கி பேருந்து ஒன்று பயணித்துக் கொண்டிருந்தது. 




ஹெராத் மாகாணத்தின் ஒரு பகுதியில் சென்று கொண்டிருந்த பேருந்து  லொறி மற்றும் மோட்டார் சைக்கிள் மீது மோதி தீப்பிடித்து எரிந்துள்ளது. 




பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் அதில் பயணித்த 17 குழந்தைகள் உட்பட 71 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 




தீப்பிடித்து விபத்திற்குள்ளான பேருந்தில் பயணித்த அனைத்து பயணிகளும் இஸ்லாம் காலாவில் வாகனத்தில் ஏறிய புலம்பெயர்ந்தோர் என்று அம்மாகாண அரசு செய்தியாளர் தகவல் வெளியிட்டுள்ளார். 




பேருந்து விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரியும் காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி மனதை உலுக்கியுள்ளது.