கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட A9 வீதியின் தட்டுவன் – கொட்டி பகுதியில் அமைந்துள்ள பேருந்து தரிப்பிடத்தில் இருந்து பெண் ஒருவரின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டது.
இச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
36 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலமே பேருந்து தரிப்பிடத்தில் இனங்காணப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
