மோட்டார் சைக்கிள் செலுத்துனரை மோதிவிட்டு தப்பிச் சென்ற வாகனம்!

  வரகாபொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு - கண்டி பிரதான வீதியில், 36 ஆவது மலைக் கோவில் அருகில் இன்று அதிகாலை மோட்டார் சைக்கிள் செலுத்துனர் ஒருவரை விபத்துக்குள்ளாக்கிவிட்டு வாகனம் ஒன்று தப்பிச் சென்றுள்ளது. 


காயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துனர் வீதியில் விழுந்து கிடப்பதாக வரகாபொல பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய செயற்பட்ட பொலிஸார், காயமடைந்தவரை வரகாபொல வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்த போதும் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

agp win news


இவ்வாறு உயிரிழந்தவர் 31 வயதுடைய கணேமுல்லை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர். 



இது வாகன விபத்து காரணமாக ஏற்பட்ட மரணம் என பொலிஸார் சந்தேகிப்பதுடன், விபத்தை ஏற்படுத்திய வாகனம் நிறுத்தாமல் தப்பிச் சென்றுள்ளது. 



சடலம் வரகாபொல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், வரகாபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.