ஒன்பது மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு

  

agp win News

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 9 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.


இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று(18) மாலை 4.00 மணி முதல் நாளை(19) மாலை 4.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.


 பதுளை, கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, மொனராகலை, நுவரெலியா, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.



 அதன்படி, மக்களை விழிப்புடன் இருக்குமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.