மஸ்கெலியா சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு!!

  

Tamil lk news

ஹட்டன்-மஸ்கெலியா சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


ஹட்டன்-மஸ்கெலியா பிரதான சாலையில் வனராஜா பகுதியில் ஒரு சைப்ரஸ் மரம் இன்று (09) காலை 8.15 மணியளவில் விழுந்துள்ளது.


மரம் விழுந்ததில் சாலையில் வாகன போக்குவரத்து சுமார் 40 நிமிடங்கள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

Tamil lk News


இருப்பினும், வனராஜா தோட்ட கிராம மக்களும் ஹட்டன் பொலிஸாரும்  விழுந்த மரத்தை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுத்தனர்.



அதன்படி, சாலை தற்போது வாகன போக்குவரத்து மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில்  சாலை ஓரமாக உள்ள ஆபத்தான பாரிய மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என வாகன சாரதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.