வீதிகளில் யாசகம் பெறும் சிறுவர்களை உரிய பாதுகாவலர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை

  வீதிகளில் யாசகம் பெறும் சிறுவர்களை உரிய பாதுகாவலர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

agpwin News


யாசகம் மற்றும் பொருட்களை விற்பனை செய்து பாதுகாப்பற்ற முறையில் நடமாடும் சிறுவர்களை பொறுப்பேற்று, அவர்களை உரிய பாதுகாவலர்களிம் ஒப்படைப்பதற்கான விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டது. 




கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு,மத்திய கொழும்பு, நுகேகொடை, கம்பஹா, பாணந்துறை, களனி, நீர்கொழும்பு, கல்கிஸ்ஸ, களுத்துறை, தங்காலை, அனுராதபுரம், கண்டி, குருநாகல், சிலாபம், இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் உள்ள சிறுவர்களுக்கே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. 




 சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்புப் பிரிவின் உத்தியோகத்தர்களை ஈடுபடுத்தி மக்கள் கூடுதலாக வசிக்கும் பிரதேசங்களில் மற்றும் பொதுமக்கள் அதிகமாக திரளும் விற்பனை நிலையங்கள், சமிக்ஞை விளக்குகள் காணப்படும் இடங்களை உள்ளடக்கி இச்சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.