இலங்கையில் பயங்கரம்; தாயும், மகளும் கூரிய ஆயுதங்களால் வெட்டிப் படுகொலை!

agpwin News

  அனுராதபுரத்தில் வீட்டில் தனியாக வசித்து வந்த தாயும், மகளும் கூரிய ஆயுதங்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.


இந்தக் கொடூர சம்பவம் அனுராதபுரம், கலன்பிந்துனுவெவை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய தாயும், 23 வயதுடைய மகளுமே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.


 மேற்படி இருவரின் சடலங்களும் வீட்டில் இருந்து நேற்றுக் காலை மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலைக்குப் பயன்படுத்திய கூரிய ஆயுதங்களையும் வீட்டில் இருந்து பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.



 கொலைச் சம்பவம் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்றிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.



கொலையாளிகள் எனச் சந்தேகிக்கப்படும் அயல்வீட்டின் உரிமையாளர் உட்பட மூவரைக் கைது செய்துள்ள பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.