கணவன் மீது கோபம்; தாயின் ஈவிரக்கமற்ற செயல்

  

agpwin Tamil News

கணவன் மீது இருந்த கோபத்தால் 3 வயது சிறுமியை தாய் ஆற்றில் வீசிக்கொன்ற சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,


இந்தியாவின் கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கோலஞ்சேரி வரிகோலி மட்டக்குழி பகுதியை சேர்ந்தவர் சுபாஷ். இவரது மனைவி சந்தியா. இவர்களது மகள் கல்யாணி (வயது3).


 சந்தியாவும், அவரது கணவரும் குடும்ப பிரச்சனை காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். 



நேற்று (19) அங்கன்வாடி மையத்துக்கு சென்றிருந்த சிறுமியை, தாய் சந்தியா அழைத்துக் கொண்டு வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வரும் வழியில் தனது மகள் திடீரென காணாமல் போய் விட்டதாக சந்தியா தெரிவித்துள்ளார்.


 இதுகுறித்து கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பொலிஸார் வழக்கு பதிந்து சிறுமி கல்யாணியை தேடினர்.   சிறுமியின் தாயிடம் பொலிஸார் விசாரணை நடத்தியபோது முன்னுக்கு பின் முரணாக சில தகவல்களை தெரிவித்தாக தெரிகிறது.



 இதனால் தாய் மீது பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.  சிறுமியை ஆற்றுக்குள் வீசியிருக்கலாம் என்று கருதி ஆற்றுக்குள் தேடும் பணி மேற்கொள்ளப்பட்ட நிலையில் சுமார் 8 மணி நேர தேடு தலுக்கு பிறகு ஆற்றில் மூழ்கிக்கிடந்த சிறுமி கல்யாணியின் உடல் மீட்கப்பட்டது.



 தாய் சந்தியாவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர் தான் சிறுமியை ஆற்றுக்குள் வீசியது தெரியவந்தது.


 விசாரணை முடிந்தபிறகே, தனது மகளை சந்தியா எதற்காக ஆற்றில் வீசி கொன்றார்? என்பது தெரிய வரும். விசாரணைக்கு பின் அவர் கைது செய்யப்படுவார் என தெரிகிறது.