பதுளையை உலுக்கிய கோர சம்பவம்!

  பதுளை நகரின் மையத்தில் நபர் ஒருவரை தனது மூத்த சகோதரனே கூறிய ஆயுதத்தால் வெட்டிய கோர சம்பவமொன்று நடந்துள்ளது.


குறித்த சம்பவம், இன்று(20.05.2024) மாலை 4.00 மணியளவில் பதுளை நகரின் மையத்தில் நடுவீதியில் இடம்பெற்றுள்ளது.

agpwin Tamil News


சம்பவத்தில் காயமடைந்தவர் தற்போது கவலைக்கிடமான நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


 தாக்குதல் நடத்திய நபர், வீதியோரத்தில் பலாக்காய் விற்பனை செய்பவர் எனவும் காயமடைந்தவர் தினக்கூலி வேலை செய்பவர் எனவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.



 இந்நிலையில், தாக்குதலை நடத்தியவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


சம்பவம் தொடர்பான காணொளியை காண 'Link'ஐ அழுத்தவும்.