யாழில்-மனைவியை மிரட்டிய கணவருக்கு நேர்ந்த கதி-Jaffna News

 தற்கொலை செய்யப் போவதாக மனைவியை மிரட்டியவர், கழுத்தில் போடப்பட்ட சுருக்கு இறுகி மூச்சுத் திணறல் ஏற்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்


குறித்த சம்பவம் நேற்று(14.11.2025) இடம்பெற்றுள்ளது.


உரும்பிராய் தெற்கு, உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த ஜெ.சுரேந்தன் (வயது 33) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


 

agp win News

இது குறித்து மேலும் தெரியவருகையில், இவர் கடந்த எட்டாம் திகதி இரவு மது போதையில் வீட்டுக்கு வந்து மனைவி பிள்ளைகளுடன் முரண்பட்ட நிலையில் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.


 பின்னர் கதிரையில் அமர்ந்திருந்து கழுத்தில் சுருக்கிட்டவாறு தான் தற்கொலை செய்யப் போவதாக மனைவியுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.


கைபேசியில் உரையாடியவாறே மதுபோதையில் உறங்கியுள்ளார். பின்னர் அவரது சகோதரன் அங்கு சென்று பார்த்தவேளை அவர் கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு கயிற்றினை கழற்றிவிட்டு கீழே உறங்க வைத்துள்ளார்.



இந்நிலையில் சிறிது நேரத்தில் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனால் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.



அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்