உயர்தர பரீட்சைக்கு சென்று திரும்பிய மாணவன் நொடியில் உயிர் தப்பிய விபத்து

  பருத்தித்துறை மெத்தை கடை சந்தியில், நேற்று காலை 10:40 மணி அளவில் இடம்பெற்ற விபத்தில் உயர்தர பரீட்சைக்கு சென்று திரும்பிய மாணவன் படுகாயம் அடைந்துள்ளார்.


மோட்டார் சைக்கிளுடன் ஆட்டோ மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதோடு,

Tamil lk News


மாணவனின் அதிவேக பயணமே விபத்து காரணம் என கூறப்படுகிறது.


குறித்த மாணவன் முன்னரும் விபத்தை ஏற்படுத்திய நிலையில் சாரதி அனுமதிப்பத்திரம் பொலிசாரிடம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 



பருத்தித்துறை போக்குவரத்து பொலிசார் இந்த விபத்து குறித்து விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.