தெல்தோட்டை – கண்டி பிரதான வீதியின் ஹால்வத்தைப் பகுதியில் இன்று அரச பேருந்தின் மீது மரம் முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான குறித்த பேருந்து பயணித்துக் கொண்டிருந்தபோது திடீரென அருகிலிருந்த பெரிய மரம் முறிந்து அதன் மீது விழுந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் பேருந்தில் பயணித்த மேலும் 10 பேர் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
