கால்வாயில் கவிழ்ந்த கார்

 

agp win News

 பாணந்துறை - கர்மாந்தபுர வீதியில் காரொன்று வழுக்கிச் சென்று கெரபன் கால்வாயில் கவிழ்ந்துள்ளது. 




அதிர்ஷ்டவசமாக காரில் பயணித்த இரண்டு பேருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. 




குறித்த பிரதேசவாசிகளால் கயிறுகளின் உதவியுடன் கார் மீட்கப்பட்டுள்ளது.




முன்னால் வாகனமொன்று வந்தநிலையில் காரின் சாரதி பிரேக்கை மிதித்துள்ளார். ஆனால், மழை காரணமாக வீதி வழுக்கும் தன்மையுடன் இருந்தமையால் கார் வீதியை விட்டு விலகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

car-overturned-in-canal