யாழ்ப்பாணம்(Jaffna) - புன்னாலை கட்டுவன் பகுதியில் பெண் ஒருவரது தங்கச் சங்கிலியை அறுத்த சந்தேகநபர் ஒருவர் இன்றையதினம் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
நேற்றையதினம் குறித்த பெண் அந்த வீதியில் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார்.
இதன்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அந்த பெண்ணின் சங்கிலியை அறுத்து சென்றுள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
விசாரணைகளின் அடிப்படையில், சம்பவம் இடம்பெற்று 24 மணிநேரத்துக்குள் அளவெட்டி பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவரை சுன்னாகம் பொலிஸார் கைது செய்தனர்.
மேலுமொருவரை கைது செய்ய விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த கொள்ளை சம்பவத்திற்கு அவர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் அறுத்த சங்கிலியை அடகு வைத்துள்ள விடயம் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
