சஷீந்திர ராஜபக்சவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்! Srilanka News

 

Agp Win News

 விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்சவை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.




இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு பிரதம நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.




முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, மகாவலி அதிகாரசபையின் காணியில் கட்டப்பட்ட தமது அரசியல் அலுவலகத்தை போராட்டக்காரர்கள் அழித்தமைக்கு இழப்பீடாக 88 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவை சட்டவிரோதமாக பெற்று ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றத்தை புரிந்தமை தொடர்பில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.