பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக பிரான்ஸ் நாடும் அறிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு கூட்டத்தில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரான் இதனை அறிவித்தார்.
அதேவேளை, பலஸ்தீனத்தை தனிநாடாக 140க்கும் மேற்பட்ட நாடுகள் அங்கீகரித்துள்ளன.
இதற்கிடையே, பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக இங்கிலாந்து, கனடா, அவஸ்திரேலியா ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன.
உலக நாடுகள் பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதற்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கண்டனம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.