வவுனியாவில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில் இளைஞர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.
வவுனியா, சோயா வீதியில் உள்ள வீடு ஒன்றில் ஒரு வாரத்திற்கு முன் திருட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தது.
குறித்த சம்பவம் தொடர்பில் குறித்த வீட்டில் வசித்து வந்தவர்கள் வவுனியா தலைமை பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்தனர்.
குறித்த முறைப்பாட்டுக்கு அமைய வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயக்கொடி அவர்களின் வழிகாட்டலில் குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டனர்.