காணி உரிமை தினத்தை முன்னிட்டு ஹட்டன் நகரில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று காலை இடம்பெற்றது.
மலையக மக்களின் காணி உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் 'மலையக மக்களின் காணி உரிமை மற்றும் வீட்டுரிமைக்கான அமைதிவழிப் போராட்டம்' எனும் தொனிப்பொருளில்,
ஹட்டன் நகர புட்சிட்டியிலிருந்து பஸ் தரிப்பிட்டம் வரை பேரணியாக வருகை தந்து போராட்டம் முன்னெடுத்தனர்.
காணி உரிமையை கோரிய கோசங்கள், பதாதைகள் ஏந்தி இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் மலையக சிவில் அமைப்புகள், அரசியல்துறைசார்ந்தோர் கலந்து கொண்டனர்.

வலி.வடக்கிலுள்ள 2400 ஏக்கர் காணிகளை விடுவிக்கக்கோரி தொடர் போராட்டம்
இன்றைய பேரணிக்கு மலையக அரசியல் அமைப்புகள் தமது ஆதரவினை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.