யாழில் நிறுத்தப்பட்ட இசை நிகழ்ச்சி! ; சோகத்துடன் வெளியேறிய பாடகர்கள்!!

 

agpwin News

 யாழ்ப்பாணத்தில் இன்று திடீரென பாரிய சுழல் காற்றுடன் மழை பெய்தததால் சரிகமப இசைக்குழுவினர் கலந்துகொண்ட இசை நிகழ்ச்சி நிறுத்தப்பட்டுள்ளது.


 இசைநிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தின் பிரபலமான தொலைக்காட்சி நிறுவனத்தின் சரிகமப இசைக்குழுவினர் நேற்று யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.



 ஜீ தமிழ் தொலைக்காட்சி இடம்பெற்று வரும் சரிகமப இசை நிகழ்ச்சியானது சீனியர், யூனியர் என்ற ரீதியில் தொடர்சியாக இடம்பெற்று உலகளவில் அனைவரையும் கவர்ந்து வருகின்றது.


இந்த நிலையில், பிரம்மாண்ட இசைநிகழ்ச்சியொன்று யாழ்ப்பாணத்தில் ஏற்பாடுசெய்யப்பட்ட நிலையிலேயே சரிகமப இசைக்குழுவினர் பலாலி விமான நிலையத்தினூடாக யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.

agpwin News


 இசை நிகழ்வைசரிகமபவின் பிரபல தொகுப்பாளினி அர்ச்சனா தொகுத்து வழங்கவிருந்தார். மேலும் சரிகமப லிட்டில் சாம்பிஸின் சீசன் 4 இன் ரைட்டில் வின்னரான திவினேஷ் உட்பட 10 பாடகர்கள் இந்த இசைநிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.



இந்நிலையில் ஒரு பாடல் பாடி முடிப்பதற்கு முன்னரே காற்றுடன் மழை பெய்ததால் நிகழ்ச்சி தடைப்பட்டதுடன் நிகழ்ச்சியும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.