இஸ்ரேலில் பரவி வரும் காட்டுத்தீ: பலர் பாதிப்பு!

  இஸ்ரேலின் வனப்பகுதியில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


குறித்த காட்டுத்தீயால் இதுவரை  குறைந்தது 13 பேர் காயமடைந்துள்ளனர். 

agp win tamil news


அவர்களில் இரண்டு கர்ப்பிணிப் பெண்களும், ஒரு வயதுக்குட்பட்ட இரண்டு குழந்தைகளும் அடங்குவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.


இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.



அதேவேளை 160 க்கும் மேற்பட்ட மீட்பு மற்றும் தீயணைப்பு குழுக்கள் தீயணைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.



பல  விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் தீயை அணைக்க முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.