தவாறான முறைக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி: மூவர் அதிரடி கைது!

 

agp win Tamil News

 

வட்டுக்கோட்டை காவல்துறை பிரிவிற்குட்பட்ட தொல்புரம் பகுதியில் 14 வயது சிறுமியை தவறான முறைக்கு உட்படுத்திய செய்த மூன்று ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இந்த கைது நடவடிக்கையானது, வட்டுக்கோட்டை காவல்துறையினரால் இன்று (26) மேற்கொள்ளப்பட்டுள்ளது.


குறித்த சிறுமி நீண்ட காலமாக இவ்வாறு தவறான முறைக்கு உட்படுத்தபட்டு வந்துள்ளதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.



 இதன்படி, பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.



 இதேவேளை, சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Jaffna Tamil News