நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்து – 60 பேர் உயிரிழப்பு !!

  

agpwin News

நைஜீரியாவில் படகு  கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 60 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


 


நைஜீரியாவின் வட-மத்திய நைஜர் மாநிலத்தில் 80  பயணிகளை  ஏற்றிச் சென்ற படகு விபத்துக்குள்ளானதில் 60 பேர் உயிரிழந்துள்ளதோடு  15க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.


 


குறித்த படகு அதிக சுமையுடன் இருந்ததால், மரத்தின் அடிப்பகுதியில் மோதியதையடுத்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.