வவுனியா ஓமந்தயில் - புகையிரத்துடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டு விபத்து : இருவர் படுகாயம்!!

 

agpwin News

 ரயிலுடனும் மோட்டார் சைக்கிள் மோதியதில் தாயும் மகளும் என இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.




இந்த விபத்துச் சம்பவம் வவுனியா - ஓமந்தை பறநாட்டான்கல் பகுதியில் இன்று காலை நிகழ்ந்துள்ளது. 


 


ஓமந்தையிலிருந்து பயணித்த மோட்டார் சைக்கிள்  ஏ-9 வீதியிலிருந்து பறநாட்டான்கல் வீதிக்கு ஏற முற்பட்ட வேளை,  யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயிலுடன் மோதியதில் விபத்துக்குள்ளாகியது.  




விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தாயும் மகளும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன்  மோட்டார் சைக்கிளும் பலத்த சேதங்களுக்குள்ளாகியுள்ளது. 




விபத்தையடுத்து 20 நிமிடங்கள் தாமதமாகி குறித்த ரயில் கொழும்பு நோக்கி பயணித்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார்,  விபத்து தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 




மேலும் விபத்து இடம்பெற்ற  குறித்த ரயில் கடவை ஓர் பாதுகாப்பற்ற  ரயில்  கடவையாகும் என்பதுடன் அது குறித்த எச்சரிக்கை பதாதைகளும் அங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.