வவுனியாவில் மூவர் அதிரடியாக கைது - Vavuniya News

 

agpwin News

 (Vavuniya News) வவுனியாவில் ஐஸ் போதைப் பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பண்டாரிக்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த கைது நடவடிக்கை நேற்றையதினம் (18.07.2025) இடம்பெற்றுள்ளது.


 வவுனியா, பண்டாரிக்குளம் பொலிஸார் கூமாங்குளம் பகுதியில் விசேட நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது, ஐஸ் போதைப் பொருளை உடமையில் வைத்திருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



வவுனியா, கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த 33 வயது இளைஞன் ஒருவரிடம் இருந்து 3 கிராம் 300 மில்லி கிராம் ஐஸ்போதைப் பொருளும், நெளுக்குளம் பகுதியைச் சேர்ந்த 31 வயது இளைஞன் ஒருவரிடம் இருந்து 266 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளும்,



 யாழ்ப்பாணம், நெடுந்தீவு பகுதியைச் சேர்ந்த 21 வயது இளைஞன் ஒருவரிடம் இருந்து 230 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளும் மீட்க்கப்பட்டன.


இதனையடுத்து, குறித்த மூவரையும் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.