இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து; 25 பேர் காயம் !!

  

apwin News

கேகாலை, கலிகமுவ பகுதியில் இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 25 பேர் காயமடைந்துள்ளனர்.


தனியார் பேருந்தொன்றும், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளனர்.


இன்று (21) அதிகாலை 5 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 


வெரகொடவில் இருந்து கேகாலை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான  பேருந்தும், 


கேகாலையில் இருந்து இரத்தினபுரி ​நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றுமே இவ்வாறு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர். 


விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக கேகாலை மற்றும் வரக்காபொல மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கேகாலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.