வெடித்துச் சிதறிய எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் ரொக்கெட்

agpwin News


  அமெரிக்காவின்(USA) தெற்கு டெக்சாஸ் பகுதியில் உள்ள எலான் மஸ்க் தலைமையிலுள்ள SpaceX நிறுவனத்தின் சோதனைத் தளத்தில், Starship ரொக்கெட் வெடித்து சிதறியுள்ளது.


இதனால் அப்பகுதியில் பெரும் தீப்பிழம்பு உருவாகியுள்ளது.


 இரவு 11.00 மணியளவில் பரிசோதனைக்கு முன்னதாகவே "தொழில்நுட்ப சிக்கல்" ஏற்பட்டதாக SpaceX நிறுவனம் சமூக ஊடகத்தில் தெரிவித்துள்ளது.


ஸ்டார்ஷிப் என்பது விண்வெளிப் பயணம் முதல் செயற்கைக்கோள் ஏவுதல் வரை பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் நோக்கத்துடன் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு வரும் ஒரு ரொக்கெட் ஆகும்.



இந்த வெடிப்பால் ஏற்பட்ட தீவிபத்தில், பணியாற்றிய ஊழியர்கள் யாரும் காயமடையவில்லை என்றும், அருகிலுள்ள குடியிருப்பு பகுதிக்கு எந்தவிதமான ஆபத்தும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



 இந்நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைப்பெற்று வருவதால், பொதுமக்கள் அந்தப் பகுதிக்கு செல்ல வேண்டாம் என SpaceX எச்சரிக்கை விடுத்துள்ளது.


 இந்த சம்பவம் குறித்து வணிக விண்வெளிப் பரிசோதனைகளை கண்காணிக்கும் Federal Aviation Administration (FAA) அமைப்பிடம் கருத்துக்கேட்டபோது, உடனடியாக பதிலளிக்கவில்லை.



ஸ்பேஸ் எக்ஸின் ஸ்டார்ஷிப் ரொக்கெட் சோதனை தோல்வியடைவது இது முதல்முறையல்ல. இதற்கு முன்பு பலமுறை ரொக்கெட் ஏவுதல் சோதனைகள் தோல்வியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.