மரணிக்கும் தருவாயில் தாயின் உன்னத செயல்; நாட்டை உலுக்கிய சோகம்

  கொத்மலை - கெரண்டி எல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் சிக்கியபோது, ​​தனது குழந்தையைப் பாதுகாத்து, தாய் அன்பின் வலிமையை உலகுக்கு உணர்த்திய தாயும் இன்று காலமானார்.

agp win Tamil News


 அந்தக் காட்சி காணொளியாக சமூக ஊடகங்களில் பரவியதால் அநேகர் அந்த தாய் மீது அதிகமாகக் கவனம் செலுத்தினர். கொத்மலையின் கெரண்டி எல்ல பகுதியில் இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தில் 22 பேர் உயிரிழந்ததுடன், 35ற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.



உயிரிழந்தவர்களில் ஆறு பெண்களும் 16 ஆண்களும் அடங்குவர், ஒன்பது பேர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.



 இந்த துயரச் சம்பவத்தின் போது பலரின் கண்களில் கண்ணீரை வரவழைத்த காட்சி இது.


பேருந்தின் இடிபாடுகளுக்கு மத்தியில் போராடிய அந்த தாய்க்கு இனி வலிமை இல்லை என்றாலும், அவள் மரணத்தை எதிர்கொண்ட போதும் அவளுடைய குழந்தைக்கு அரவணைப்பையும் பாதுகாப்பையும் வழங்கும் அளவுக்கு அவளுடைய தாய்மை வலுவாகிவிட்டது.



8 மாதக் குழந்தையை இந்த உலகில் தனியே விட்டுவிட்டு அந்த தாயும், தகப்பனும் இந்த உலகத்திலிருந்து விடைபெற்றுச் சென்றனர்.


இதேவேளை இந்த விபத்தில் மீரியபெத்த பகுதியைச் சேர்ந்த மற்றுமொரு குடும்பத்தின் தாயும் தந்தையும் உயிரிழந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.



இந்த விபத்தில் சிக்கிய அந்த குடும்பத்தின் மூன்று பிள்ளைகளும் விபத்தில் தப்பித்த நிலையில் பெற்றோர் உயிரிழந்தனர்.



விபத்தில் காயமடைந்த 10 வயது மகன், 16 வயது மகள் மற்றும் 9 மாத குழந்தை ஆகியோர் நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.