தமிழ் மக்கள் கூட்டணியின் வவுனியா (Vavuniya) பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் வேட்பாளர்களுடனான கலந்துரையாடல் இன்றையதினம் வவுனியாவில் நடைபெற்றது.
தேர்தலுக்கு பின்னரான செயற்பாடுகள் தொடர்பாக சட்டத்தரணி மணிவண்ணன் தலைமையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
தவிசாளர்கள் தெரிவில் தமிழ் மக்கள் கூட்டணியின் நகர்வுகள் எவ்வாறு அமையப்போகிறது, பிரதேச சபைக்கு உறுப்பினரை நியமிப்பது, கட்சியை வவுனியா மாவட்டத்தில் விரிவாக்கம் செய்வது மாகாண சபை தேர்தல் தொடர்பில் நகர்வுகள் எவ்வாறு இருக்கப்போகிறது போன்ற விடயங்கள் இந்த கலந்துரையாடலில் விரிவாக கலந்துரையாடப்பட்டதாக சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.