அரச ஊழியர்களுக்கு அரசாங்கம் வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்

 

agp Win Tamil News

அரச ஊழியர்களுக்கு பேரிடர் கடன் வழங்குவது தொடர்பாக புதிய விதிமுறைகளை உள்ளடக்கிய புதிய சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.


அரச நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால், அமைச்சு செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்கள தலைவர்களை அறிவுறுத்தும் வகையில் வெளியிடப்பட்ட இந்த சுற்றறிக்கை 2025.05.01 முதல்  நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.


 அதில், 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் மூலம் அரச ஊழியர்களின் குறைந்தபட்ச ஆரம்ப சம்பளம் உயர்த்தப்பட்டதை கருத்தில் கொண்டு, அரச ஊழியர்களுக்கு பேரிடர் கடன் வழங்குவதற்கான உச்ச வரம்பு எல்லையை தற்போதுள்ள 250,000 ரூபாவில் இருந்து 400,000 ரூபாவாக உயர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.