இந்தியாவில் அவசரகால முன்னெச்சரிக்கை நடவடிக்கை; மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்

  இந்தியாவில் அவசரகால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


agp win Tamil News



அது தொடர்பில் மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய உள்துறை சார்பில் அனுப்பப்பட்டுள்ள அந்த கடிதத்தில்,




 அவசரகால நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




 மருந்துகள், உணவு தானியங்கள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் இருப்பில் வைத்துக்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.




மேலும் கூடாரம், வாகனங்கள், ஜெனரேட்டர் உள்ளிட்டவற்றை தயார் நிலையில் வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.